Sunday, December 4, 2016

மற்றுமொரு அதிரடி வசதியினை அறிமுகம் செய்தது யூடியூப்!

Loading...

வீடியோக்களை ஒன்லைனில் பகிர்ந்துகொள்ளும் வசதியினை தரும் யூடியூப் தளமானது பல வசதிகளையும் பயனர்களுக்கு தருகின்றது.

இவற்றில் நேரடி ஒளிபரப்பினை செய்யும் வசதியும் பிரதானமாகக் காணப்படுகின்றது.

தற்போது இவ் வசதியில் 4K வீடியோக்களையும் நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடிய வகையில் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வசதி 360 டிகிரி வீடியோக்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் 4K வீடியோக்களை பதிவேற்றும் வசதி தரப்பட்டிருந்த நிலையில் நேரடி ஒளிபரப்பிற்கு 4K வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை பலத்த வரவேற்பைப் பெற்றுவருகின்றது.

இவ் வசதியானது கடந்த டிசம்பர் முதலாம் திகதியிலிருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

செக்கனுக்கு 60 பிரேம்கள் கொண்ட இவ் வீடியோ தொழில்நுட்பத்தின் உதவியுடன் இனிமேல் உயர்தரம் கொண்ட நேரடி ஒளிபரப்புக்களை கண்டுமகிழ முடியு


Source : https://youtube.googleblog.com/2016/11/4k-live-streaming-live-has-never-looked.html

No comments:

Post a Comment