இரும்புச்சத்து உள்ள உணவுகள்


அன்றாட வாழ்வில் மனிதர்கள் தங்கள் வேலையில் காட்டும் அக்கறையைத்தங்கள் உணவில் காட்டுவது இல்லை.


வேலைப் பளுவினால் உணவை சரியான நேரத்தில் சாப்பிடுவது இல்லை.

சிலர் கடைகளில் விற்கும் உணவுகளை சாப்பிடுவதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவதிக்கு உள்ளாகின்றனர்.

நம் தினமும் உண்ணும் உணவில் வைட்டமின்கள்,புரதங்கள் மற்றும் இரும்புச் சத்துகள் கட்டாயமாக இருக்க வேண்டும்.

பெரும்பாலும் அசைவ உணவுகளில் தான் அதிகளவு இரும்புச் சத்துகள் உள்ளன. ஆனால் இன்றளவில் மக்கள் அனைவரும் அசைவம் சாப்பிடுவது இல்லை.

இப்போது நாம் சைவத்தில் உள்ள இரும்புச் சத்துள்ள உணவுகளைப் பார்ப்போம்.

பசலைக்கீரை:
 • பொதுவாக கீரை உணவுகள் என்றாலே சத்து நிறைந்தவை.
 • அதிலும் பசலைக்கீரையில் மனிதருக்கு தேவையான இரும்புச்சத்து அதிகமாகவே உள்ளன.

கேல் காய்கறி:
 • கேல் என்ற ஒரு காய்கறி உள்ளதா என்று சிலருக்கு சந்தேகம் வரும்.
 • இந்த காய்கறி இறைச்சிக்கு இணையான அளவு இரும்புச் சத்தை கொண்டுள்ளது.

உருளைக்கிழங்கு: 
 • உருளைக்கிழங்கில் அதிகளவு இரும்புச் சத்து உள்ளன. 
 • அன்றாடமும் ஒரு உருளைக்கிழங்கை சாப்பிடுவது நல்லது.
 • இதை வேக வைத்து அல்லது பொறியல் ஆக சமைத்து சாப்பிடுவது நல்லது.

பருப்பு வகைகள்:
 • பருப்பில் அதிகளவு இரும்புச் சத்துகள் உள்ளன.
 • இவற்றை வேக வைத்து அல்லது சமைத்து சாப்பிடுவது நல்லது.
 • இரும்புச் சத்து  உணவுகளில் இது  முதன்மையானது.

பேரிச்சம் பழம்:
 • தினமும் பேரிச்சம் பழம் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் நல்லது.

சுண்டல்:
 • வாரத்தில் 4 முறையாவது காலை அல்லது மாலையில் சுண்டல் சாப்பிடுவது நல்லது.
 • இதை வேக வைத்து அல்லது அவுள்  உடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது.

Post a Comment (0)
Previous Post Next Post