வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசஞ்சரை இணைக்க திட்டம்!

மெசஞ்சர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் செயலிகளை இணைக்க பேஸ்புக் திட்டமிட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனம் மெசஞ்சர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் செயலிகளை ஒன்றிணைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் செயலிகளை பயன்படுத்துவோருடன் தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும்.

மூன்று செயலிகளுக்கிடையே நடக்கும் சாட்கள் என்க்ரிப்ட் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இதற்கான ஒப்புதல் இதுவரை பேஸ்புக் இதுவரை வழங்கவில்லை

இவ்வாறு செயல்படுத்தும் பட்சத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் அனைவரும் மற்ற இரு செயலிகளை நிச்சயம் பயன்படுத்துவர் என கருதமுடியாது. இதன் மூலம் விளம்பர வருவாய் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment (0)
Previous Post Next Post