அண்டவெளியிலிருந்து புவியை நோக்கி வரும் மர்ம ரேடியோ அலைகள்!!

Image result for FRB 121102
FRB 121102 எனும் ரேடியோ முதலில் இருந்து வெளியேறும் பெரும் எண்ணிக்கையிலான ரேடியோ சமிக்ஞைகள் மு்னனர் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் தற்போது அண்டவெளியில் இருந்து பூமியை நோக்கி வரும் 72 புதிய ரேடியோ சமிக்ஞைகள் கண்டறியப்பட்டுள்ளன.

வேகமான ரேடியோ வெடிப்புகள் (FRBs) என்பது பிரபஞ்சத்தில் இடம்பெறும் ஒரு மர்ம நிகழ்வு.

இவை மிக சக்திவாய்ந்தவையாக இருப்பதுடன் பலநூறு மில்லியன் சூரியன்கள் போன்று சக்தியை காலுகின்றன.

ஆனால் இவ் வெடிப்புக்கள் ஒரு குறுகிய கணத்தில் தோன்றி மறைகின்றன. அத்துடன் சில மில்லிசெக்கன் வரையிலேயே நீடிக்கின்றன.

இவற்றில் பெரும்பாலான முதல்கள் ஒரு தடவை மாத்திரமே வெடிப்புக்குள்ளாகின்றன.

இவ் வெடிப்புக்கள் எப்படி நடக்கும், எப்பொழுது நடக்குமென யாராலும் கூறிவிட முடியாது.

இதனால் ஆய்வாளர்களால் அவதானிப்புக்களை திட்டமிட்டு மேற்கொள்ள இயலாது. ஆனால் FRB 121102 எனும் ரேடியோ முதலானது தனித்தன்மை உடையதாக இருக்கின்றது.

இது 2012 இல் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து அடிக்கடி வெடிப்புச் சம்பவங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. இவ்வாறு செயற்படும் ஒரோயொரு ரேடியோ முதல் இதுதான்.

இதன்காரணமாக இதன் தொழிற்பாடு எளிதாக அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

இதைத்தான் ஆய்வாளர்களும் கடந்த ஓகஸ்டு 26, 2017 ஆம் திகதியன்று நடைமுறைப்படுத்தியிருந்தனர்.

இவர்கள் மேற்கு வேர்ஜினியாவில் சுமார் 5 மணிநேரத்துக்கு தொலைகாட்டியை நிறுத்திவைத்து அவதானித்திருந்தனர்.

இதன்போது 21 வெடிப்புச் சம்பவங்கள் அவதானிக்கப்பட்டிருந்தன. இவையனைத்தும் அதன் முதல் மணித்தியாலத்திலேயே நிகழ்ந்திருந்தன.

இதன்படி இவ் ரேடியோ முதல்கள் முதல் நேர ஆயிடைகளில் வெறித்தனமானச் செயற்பட்டு பின்பு அமைதியாகிவிடுகின்றன.

FRB 121102 இலிருந்து பெறப்பட்ட சமிக்ஞைகளை பகுப்பாய்வு செய்தபோது விஞ்ஞானிகளால் 72 புதிய அலைகளை அவதானிக்க முடிந்திருக்கிறது.

இவை உட்பட இதுவரையில் 300 சமிக்ஞைகள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment (0)
Previous Post Next Post