ஒரு போட்டோவுக்காக 5 ஆயிரம் மைல் கடந்து சென்ற பத்திரிகையாளர்!

அமெரிக்காவில் பத்திரிகையாளர் ஒருவர் 5 ஆயிரம் மைல் கடந்து சென்று சூரிய கிரகணத்தைப் படம் பிடித்துள்ள சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு பிசி மேகசின் (PC Magazine) என்ற வெப்சைட் செயல்பட்டு வருகிறது. இதில் லேப்டாப், ஸ்மார்ட்போன், டிவி, சாப்ட்வேர் போன்ற தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை வெளியிட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் டானி ஹாஃப்மேன் என்பவர் புகைப்படக் கலைஞராக பணியாற்றி வருகிறார். இவர் இயற்கை, தொழில்நுட்படம் தொடர்பான புகைப்படங்களை நேரடியாக களத்திற்கு சென்று படம் பிடிப்பது வழக்கம். 

இந்த நிலையில், அண்மையில் டானி ஹாஃப்மேன் 5 ஆயிரம் மைல் கடந்து சென்று சூரிய கிரகணத்தை மிகஅழகாக படம் பிடித்துள்ளார். கடந்த ஜூலை 2ம் தேதி சூரிய கிரகணம் ஏற்பட்டது. வடமேற்கு அர்ஜென்டினா பகுதியில் இந்த கிரகணம் துல்லியமாக தெரியும், அதுவும் முழு கிரகணம் ஏற்படும் என்று முன்கூட்டியே கணிக்கப்பட்டது. 

இதையடுத்து நியூயார்க்கில் இருந்து பத்திரிகையாளர் டானி, தனது பெட்டி படுக்கையுடன் சூரிய கிரகணத்தை போட்டோ எடுப்பதற்காக ஒரு குழுவுடன் அர்ஜென்டினா கிளம்பி விட்டார். அதிர்ஷ்டவசமாக டானி செல்லும் வழியில் எல்லாம் காலநிலை மாற்றம் அவருக்கு சாதகமாக இதமாகவே அமைந்தது. 

மேலும், அவருடன் வந்த குழுவும் நல்ல ஜாலியான ஆட்கள் தான். எனவே, நேரம் போனதே டானிக்கு தெரியவில்லையாம். மேலும் போகும் வழியில் காடு, மலை போன்ற இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் எல்லாம் இருந்தது. அவற்றையெல்லாம் க்ளிக் செய்தார் டானி. அரியவகை வனவிலங்குகள், மக்களின் கலாச்சாரம், பறவையினங்கள் அனைத்தையும் போட்டோ எடுத்தார். 

தலைகீழாக மாறிய உலகம்:
கார்த்தி நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ நகர்ப்புறத்தில் இருந்து மக்கள் நடமாட்டமே இல்லாத தொலைத்தூரத்துக்கு சென்றனர் டானி குழுவினர். நியூயார்க் நகரில் இருந்து 40.7 டிகிரி கோணத்தில் வடக்கையும், தென்அமெரிக்காவில் இருந்து 29.3 டிகிரி தெற்கு கோணத்திலும் டானி இருந்தார். இது உலகின் தலைகீழ் பகுதி போன்றதாகும்.

அப்போது இரவு நேரத்தில் சுற்றும்முற்றும் எந்த ஒரு வெளிச்சமும் இல்லை. அப்படியே மேல்நோக்கிப் பார்த்தால், எண்ணற்ற நட்சத்திரங்கள், காந்த அலைகளுடன் பிரபஞ்சம் பிரகாசித்துக் கொண்டிருந்தது. யாரும் பார்க்க முடியாத கண்கொள்ளாக் காட்சியை பத்திரிகையாளர் டானி பார்த்தனர். அவர் அதையும் போட்டோ எடுத்துக் கொண்டார்.

சூரிய கிரகணம்:
இதையடுத்து அர்ஜென்டினாவில் உள்ள சன் ஜூவான் என்ற நகரைக் கடந்து சென்று சூரிய கிரகணம் துல்லியமாக தெரியும் இருப்பிடத்துக்கு டானி சென்றடைந்தார். சூரிய கிரகணம் தொடங்குவதற்கு முன்பே, அங்கு சென்று காத்திருந்தார். அவர் எதிர்பார்த்தது போலவே, சூரியனை நோக்கி நிலவு மெல்ல வந்தது. தொடக்கத்தில் அரை சூரிய கிரகணம் நடைபெறும் போதே டானிக்கு புல்லரித்து விட்டது. சரியாக 15 நிமிடங்களில் முழு சூரிய கிரகணம் ஏற்பட ஆரம்பித்தது.

இதைக்கண்ட பத்திரிகையாளர் டானி சூரியகிரகணத்தை அடுத்ததடுத்து தொடர்ந்து போட்டோ எடுத்தார். தொலைவில் இருந்தபடியே ஒரு போட்டோ, ஜூம் செய்து ஒரு போட்டோ என வெவ்வேறு கோணங்களில் டானி புகைப்படம் எடுத்தார். இதற்காக அவர் பிரத்யேகமாக சோனிDSC-RX1000 II என்ற சூப்பரான கேமராவை பயன்படுத்தினார். மேலும், ஐபோன் 7 ப்ளஸ் ஸ்மார்ட்போனில் சூரிய கிரகணத்தையும், அவர் இருந்த பகுதிக்கு அருகில் இருந்த மலைத்தொடரையும் ஒரு சேர பனோரமா போட்டோ எடுத்தார்.

இவ்வாறு நியூயார்க்கில் இருந்து 5 ஆயிரம் மைல் கடந்து சென்று டானி புகைப்படம் எடுத்தார். அவர் எடுத்துள்ள புகைப்படங்கள் எலு்லாம் பிசி மேக் வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, அவருடைய போட்டோக்களின் மொத்த உரிமை Pc Magazine உடையதாகும். Pcmag.com என்ற இணையதளத்தில் டானி எடுத்த புகைப்படங்களை பார்க்கலாம். 

Post a Comment (0)
Previous Post Next Post