Instagram-ன் இந்த புதிய Filters பற்றி உங்களுக்குத் தெரியுமா..?

Instagram launches new Boomerang features

பேஸ்புக்கிற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் சனிக்கிழமையன்று, பூமராங் ஸ்டோரிகளை பகிர்ந்து கொள்ள, அவற்றின் நீளத்தை ஒழுங்கமைக்க புதிய சில அம்சங்களுடன், மூன்று புதிய ஆப்ஷன்களான SlowMo, Echo மற்றும் Duo ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது.



"இன்ஸ்டாகிராம் கேமரா உங்களை வெளிப்படுத்தவும், நீங்கள் என்ன செய்கிறீர்கள், சிந்திக்கிறீர்கள் அல்லது உணர்கிறீர்கள் என்பதை உங்கள் நண்பர்களுடன் எளிதாகப் பகிர்ந்து கொள்ளவும் வழிகளை வழங்குகிறது. அதல் பூமராங் ஒரு முக்கிய பகுதியாகும். மேலும், மிகவும் விரும்பப்படும் கேமரா வடிவங்களில் ஒன்றாகும். இன்ஸ்டாகிராம், படைப்பாற்றலை (creativity) விரிவாக்க உற்சாகமாக உள்ளது மற்றும் அன்றாட தருணங்களை வேடிக்கையான மற்றும் எதிர்பாராத ஒன்றாக மாற்ற, பூமராங்கைப் பயன்படுத்துவதற்கான புதிய வழிகளை உங்களுக்குத் தருகிறது" என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புதிய filters, இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் கேமராவில் அமைந்துள்ள Boomerang composer-ல் கிடைக்கின்றன.

பெயர் குறிப்பிடுவது போல, SlowMo-வுடன், பூமராங் வீடியோக்கள் அவற்றின் அசல் வேகத்தில் பாதியாக குறைக்கின்றன. Echo, இரட்டை பார்வை விளைவை உருவாக்குகிறது. பூமரங் மற்றும் Duo-வை மேம்படுத்துகிறது. இவை இரண்டும் பூமராங்கை, வேகமாகவும், மெதுவாகவும் ஆக்குகின்றன. இது ஒரு texturized effect-ஐ சேர்க்கிறது.

புதுப்பித்தலுடன் பதிவுசெய்யப்பட்ட Boomerangs-ன் நீளத்தை ஒழுங்கமைக்கவும், சரிசெய்யவும் முடியும்.

புதிய effects, over-the-air (OTA) அப்டேட்டாக வருகின்றன.

இந்த புதிய effects-ஐ அணுக, வழக்கம் போல் ஒரு Boomerang எடுத்து, ஸ்டோரி கேமராவைத் திறந்து, carousel-ல் "Boomerang"-க்கு ஸ்வைப் செய்து, பின்னர் ஷட்டர் பொத்தானைத் தட்டவும் அல்லது அதைக் கீழே பிடித்து விடவும். அடுத்து, புதிய effects-ஐ அணுக டிஸ்பிளேவுக்கு மேலே infinity சின்னத்தைத் தட்டவும்.

இன்ஸ்டாகிராம் சமீபத்தில் புதிய "Layout" அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இது பயனர்கள் ஒரே ஸ்டோரியில் பல புகைப்படங்களைச் சேர்க்க அனுமதிக்கும்.

இதன் மூலம், பயனர்கள் இப்போது ஆறு வெவ்வேறு புகைப்படங்களுடன் தங்கள் ஸ்டோரியை உருவாக்க முடியும். இருப்பினும், இந்த புதிய அம்சம் ஏற்கனவே மூன்றாம் தரப்பு செயலிகளில் இணையான படங்களை உருவாக்கியது.

ஒரு பயனர் செய்ய வேண்டியது, இன்ஸ்டாகிராமில் ஸ்டோரீஸ் கேமராவைத் திறந்து, புகைப்படங்களை சேர்க்க/இணைக்க "Layout"-ஐ க்ளிக் செய்ய வேண்டும். முடிந்ததும், Story-ஐப் போலவே மற்றவற்றையும் வெளியிடுங்கள்.
Post a Comment (0)
Previous Post Next Post