ஒரே நேரத்தில் பலருக்கு forward செய்யும் புதிய வசதி WhatsApp சேவையில் அறிமுகம்


WhatsApp பற்றி அறியாதவர்கள் யார் தான் இருக்க முடியும். வாட்ஸ்அப் சேவையானது புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அது இன்றுவரை மெசேஜிங் சேவையில் முன்னிலை வகித்து வருகிறது.


அந்தவகையில் வாட்ஸ்அப் பயனர்களை குதூகலிக்கச் செய்யும் மற்றுமொரு வசதியும் இதில் அறிமுகப்படுத்தப்பட்ட்டுள்ளது.


அதாவது வாட்ஸ்அப் மூலம் பெறப்பட்ட ஒரு செய்தியை பலருக்கு அனுப்பவேண்டிய (Forward) தேவை ஏற்பட்டால் நாம் அவற்றை தனித்தனியாகவே ஒவ்வொருவருக்கும் அனுப்பி வந்தோம் என்றாலும் இதன் பின்னர் அவ்வாறான சிரமங்கள் உங்கள் இருக்காது.

மாறாக குறிப்பிட்ட செய்தியை ஒரே நேரத்தில் பலருக்கு அனுப்பி வைக்கக்கூடிய புதிய வசதி இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை வாட்ஸ்அப் செயலியின்  2.16.230 எனும் பதிப்பில் பெற்றுக்கொள்ளலாம். இந்த பதிப்பு இதுவரை கூகுள் ப்ளே ஸ்டோரில் அறிமுகப்படுத்தப்படவில்லை. இருந்த போதிலும் இதனை கீழுள்ள  இணைப்பை பயன்படுத்தி WhatsApp  தளத்தில் இருந்து இதனை தரவிறக்கிக்கொள்ளலாம்.



Post a Comment (0)
Previous Post Next Post