முற்றிலும் புதியதொரு நோக்கியா போன் கான்செப்ட் இணைய த்தை வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது, இது வழக்கமான ஒரு நிகழ்வு தான், ஆனால் இம்முறை வெளியான கான்செப்டில் ஒரு செக்கண்டரி டிஸ்ப்ளே மற்றும் எட்ஜ்-டூ-எட்ஜ் ஸ்க்ரீன் உள்ளது என்பது தான் மிகவும் சுவாரசியமான ஒன்றாகும்.
இது நிஜமென்றால், நோக்கியா கண்ட கனவுகளிலேயே இதுதான் மிகவும் பொன்னான ஒரு கனவாக இருக்க கொடும் என்பதில் சந்தேகமேயில்லை. இந்த கருத்து வரைப்படம் ஆனது பிரபலமான வடிவமைப்பாளர் ஆன 'மைக்கேல் முலபா'விடம் இருந்து வெளியாகியுள்ளது. ஆனால் இது அதிகாரப்பூர்வமானது அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும், இந்த புதிய கருத்து ஓரளவு யதார்த்தமான ஒன்றாகவே தெரிகிறது ஆக இதை நிஜ வாழ்க்கையில் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையை நாம் பெறலாம்.
பட்டன்லெஸ்
கான்செப்ட் படங்கள் இந்த நோக்கியா ஸ்மார்ட்போன் முற்றிலும் பட்டன்லெஸ் போன் என்பதை உணர்த்துகிறது. அதன் அனைத்து கட்டுப்பாடுகளும் டிஸ்ப்ளேவில் தான் உள்ளன. மேலும், அதில் எந்தவிதமான வால்யூம் கட்டுப்பாடு பட்டனும் இல்லை என்பதால் அதன் வால்யூம் கட்டுப்பாடு எப்படி சாத்தியம் என்ற குழப்பத்தையும் உடன் கான்செப்ட் படங்கள் அளிக்கிறது.
எட்ஜ்-டூ-எட்ஜ்
எட்ஜ்-டூ-எட்ஜ்
எட்ஜ் டிசைன் என்பது மெதுவாக ஸ்மார்ட்போன் அரங்கில் ஒரு விதிமுறையாக மாறி வருகிறது. இந்த நோக்கியா கான்செப்ட் தொலைபேசியானது சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் மற்றும் நோட் 7 போன்றே உள்ளது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்
செக்கண்டரி டிஸ்ப்ளே
இந்த நோக்கியா கான்செப்டில் அதன் முதன்மை திரைகு மேல் ஒரு இரண்டாம் (செக்கண்டரி) டிஸ்ப்ளே இடம் பெறுவதை காட்டுகிறது. அந்த இரண்டாம் திரையில் 'அசிங்கமாக' 3.5எம்எம் ஹெட்ஜாக் வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அது இரண்டாம் டெக்ஸ்ட் அறிவிப்புகள், மீடியா பின்னணி, பயனர் இடைமுகம், மற்றும் விர்ச்சுவல் வால்யூம் கட்டுப்பாடுகள் ஆகியவைகளை கொண்டுள்ளது.
23எம்பி கேமரா
இந்த நோக்கியா கான்செப்ட் ஸ்மார்ட்போனின் பின்புறம் ஒரு 23எம்பி கேமரா உள்ளது, குறிப்பாக அதில் நாம் முந்தைய நோக்கியா போன்களில் கண்ட பிரபலமான கார்ல் ஜெய்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது என்ப அது சிறப்பம்சம்.
ஐஆர்ஐஎஸ் ஸ்கேனர், பிங்கர்பிரிண்ட் சென்சார்
வெளியான கான்செப்ட் புகைப்படங்களில் அக்கருவி ஐஆர்ஐஎஸ் ஸ்கேனர் மற்றும் பிங்கர்பிரிண்ட் சென்சார் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியுள்ளதை வெளிப்படுத்துகிறது. கைரேகை சென்சார் தொலைபேசியின் பின்புறம் அமைந்துள்ளது மற்றும் அதன் ஐஆர்ஐஎஸ் ஸ்கேனர் டிஸ்ப்ளேவிற்கு மேலே காணபப்டுகிறது.
Sorce :
Sorce :