சாம்சங் கேலக்ஸி A90 போன்களில் ’பாப் அப் செல்பி’ கேமரா இடம் பெறும் என்று தகவல் கசிந்துள்ளது.
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அதன் எம் சீரிஸ்போன்களைஇந்தியாவில் வெளியிட்டது. தற்போது இந்த நிறுவனம் சாம்சங் கேலக்ஸி A90 போன்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் போன்கள் தொடர்பாக ’ஐஸ் யுனிவர்ஸ்’ என்ற டுவிட்டர் பக்கத்தில் முக்கிய தகவல் கசிந்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி A90 போன்கள் ’பாப் அப் செல்பி’ கேமராவுடன் வருகிறது. இந்த போன்களின் டிஸ்பிளேவில் எந்த நோச்-யும் இடம்பெறாது என்று கூறப்படுகிறது. இதனால் இதன் டிஸ்பிளே திரை பெரியதாக இருக்கும்.இதில் இடம் பெறவிக்கும் பாப் ஆப் செல்பி கேமராவானது போனின் இடபக்கம் அல்லது நடுவில் இருக்கும் என்று தகவல் கசிந்துள்ளது.
விவோ நிறுவனம்தான் முதன்முதலில் பாப் ஆப் செல்பி கேமிரா கொண்ட விவோ Nex போன்களை அறிமுகம் செய்தது.