சமீபத்தில், அறிமுகம் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு பதிப்பின் பெயரில், ஒரு ஷாக் காத்திருந்தது. இனிமேல் கூகுள் நிறுவனத்தின் அடுத்த ஆண்ட்ராய்டு பதிப்பானது ஒருபோதும் இனிப்பு வகைகளின் பெயரை பெறாது, இனிமேல் வரும் இயங்குதளங்கள் ஆனது எண்களை மட்டுமே தன் பெயரில் சுமந்து வரும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்தது.
சற்றே சோகத்தை கிளப்பிய இந்த அறிவிப்பானது, (முன்னதாக ஆண்ட்ராய்டு க்யூ என்று அழைக்கப்பட்ட) ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ்-ன் அம்சங்களை பற்றி அறிந்ததும் காற்றோடு காற்றாய் கரைந்தது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களின் அனுபவத்தை "அடுத்த லெவலுக்கு" கொண்டு செல்ல போதுமான அம்சங்களை ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் கொண்டுள்ளது என்றே கூறலாம்.
ஒரே டேப்பில் ஒட்டுமொத்தமாக டார்க் மோட்!
மெல்ல மெல்ல உருட்டப்படவுள்ள ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் அம்சங்களின் ஒரு பகுதியாக, ஜிமெயில் ஆப்பில் "மிகவும் எதிர்பார்க்கப்பட்ட" டார்க் மோட் அம்சம் இடம்பெறும் என்பது உறுதி தற்போது செய்யப்பட்டுள்ள்ளது. இந்த புதிய System-wide dark mode அம்சத்தின் கீழ், உங்கள் ஒட்டுமொத்த ஜிமெயில் ஆப்பின் பின்னணி வண்ணத்தினை நீங்கள் ஒரே டேப் மூலம் மாற்றலாம்.
கூகுள் நிறுவனம் தனது கூகுள் க்ரோம், கூகுள் ஃபிட் மற்றும் கூகுள் பே உள்ளிட்ட ஆப்ஸ்களில் ஏற்கனவே Dark interface-களை தயாரித்துள்ளது. இருந்தாலும் கூட ஜிமெயில் ஆப்பிள் இது ஒரு முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
எந்த வெர்ஷனில் கிடைக்கிறது?
இருப்பினும் தற்போது வரையிலாக இது அனைவருக்கும் கிடைக்கவில்லை. ஜிமெயில் ஆப்பின் சமீபத்திய அப்டேட் ஆன 2019.08.18 வெர்ஷனின் கீழ் மட்டுமே இந்த இருண்ட தீம் காணப்படுகிறது. இதன் வழியாக டார்க் மோட் அம்சமானது மிக விரைவில் அனைவருக்கும் அணுக கிடைக்கும் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. உடனே "இப்போதைக்கு கிடைக்காதா?" என்று பொறுமை இழக்க வேண்டாம், இதை அணுகுவதற்கான ஒரு தந்திரம் எங்களிடம் உள்ளது.
அதென்ன தந்திரம்?
மெல்ல மெல்ல அனைவருக்கும் உருட்டப்படும் இந்த புதிய ஜிமெயில் அம்சத்தினை பயன்படுத்தி பார்க்க உங்களுக்கு போதுமான அளவு பொறுமை இல்லையெனில் நீங்கள் அதன் APK-வை பதிவிறக்கம் செய்யலாம் என்று எக்ஸ்.டி.ஏ டெவலப்பர்கள் பரிந்துரை செய்துள்ளது.
க்விக் ஸ்விட்சிங் (Quick switching)
சமீபத்திய ஜிமெயில் அப்டேட்டில் டார்க் மோட் மட்டுமின்றி க்விக் ஸ்விட்சிங் எனும் ஒரு எளிய அம்சமும் காணப்படுகிறது. ஒருவேளை நீங்கள் பல ஜிமெயில் அக்கவுண்ட்களை கையாளும் நபராக இருப்பின் இந்த அம்சம் நிச்சயமாக உங்களுக்கு கைகொடுக்கும்.
இதன் நன்மை என்ன?
இனிமேல், மேல் வலதுபுறத்தில் உள்ள அக்கவுண்ட் ஐகானை டேப் செய்து, நீங்கள் ஸ்விட்ச் ஆக விரும்பும் ஒரு அக்கவுண்ட்டை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக, வெறுமனே ஐகானில் விரலை வைத்து மேலே அல்லது கீழ்நோக்கி ஸ்லைட் செய்தால் மட்டுமே போதும். குறிப்பிட்ட ஜிமெயில் அக்கவுண்டிற்க்குள் நுழைவீர்கள்.
எளிமை மற்றும் வேகம்!
இதே அம்சம் முன்பு கூகுள் மேப்ஸ் மற்றும் கூகுள் ட்ரைவிலும் தோன்றியதுஎன்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு சிறிய மாற்றம் தான் என்றாலும் கூட, இனி நீங்கள் மின்னஞ்சல்களை நிர்வகிக்கும் முறையானது எளிதாகவும் மற்றும் வேகமாகவும் இருக்கும் என்பது வெளிப்படை.